மின்விசிறியில் தீப்பிடித்து வீடு முழுவதும் எரிந்து நாசம்..

கோவை பாளையந்தோட்டம் கெம்பட்டி காலனி, 4 -வது வீதியை சேர்ந்தவர் பேச்சி  முத்து (வயது 38) கூலித் தொழிலாளி சம்பவத்தன்று இவரது தாயார் கோவிலுக்கு சென்று விட்டார். இவரது மாமியார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவருக்கு கண் பார்வை தெரியாது .இந்த நிலையில் அவரது வீட்டில் உள்ள மின்விசிறி காலையிலிருந்து மாலை வரை ஓடிக் கொண்டிருந்தது .இதனால் அதில் தீப்பிடித்து வீடு முழுவதும் எரிந்தது .இது குறித்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து பேச்சிமுத்து கடைவீதி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.