தமிழகத்தில் போதைப் பொருள் நுழைவதை தடுக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு .!

தமிழகத்துக்குள் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். போதை பொருள் கடத்தல் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கிறார். இதில் டிஜிபி சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தின் போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின், போதை பொருள் வருங்காலத்தில் மாபெரும் பிரச்சனையாக மாறிவிடக்கூடாது. நம் முன்னால் இருக்கக்கூடிய அழிவு பாதையான போதை பாதையை நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும். அதற்கான உறுதியை எடுத்தாக வேண்டும்.

மேலும், போதை மருந்துகள் நம் மாநிலத்துக்குள் நுழைவதை தடுக்க தடுக்க வேண்டும், அது பரவுவதை தடுக்க வேண்டும். விற்பனையாவதை தடுக்க வேண்டும். பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துபவர்களை அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்தியாக வேண்டும். புதிதாக ஒருவர் கூட இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் விழிப்புடன் இளைஞர் சமுதாயத்தை பாதுகாத்திட வேண்டும்.

இந்த உறுதியை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. பஞ்சாப், குஜராத் மாநிலங்களை விட போதைப்பொருள் நடமாட்டம் தமிழ்நாட்டில் குறைவு என சமாதானம் அடைய முடியாது என்று தெரிவித்துள்ளார்.