பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, கல்லூரி, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.!

கோவையை சேர்ந்தவர் பிரபல லாட்டரி அதிபர்மார்ட்டின். இவர்லாட்டரி விற்பனையில் பல்வேறு மாநிலங்களில் முக்கிய பங்கு வகித்தார் .இந்த நிலையில் கடந்த 20 19 ஆம் ஆண்டு கோவையில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உட்பட அவர்கள் தொடர்புடைய 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது ,இந்த நிலையில் லாட்டரி தொழில் கிடைத்த பணத்தை மார்ட்டின்40 நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது .இந்த நிலையில் கடந்த மே மாதம் லாட்டரி அதிபர் மாட்டின்அவரது மருமகன், உறவினர் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்குகேரள மாநில பதிவு எண் கொண்ட காரில் அமலாக்க துறை அதிகாரிகள் கோவை வெள்ளக் கிணறு பகுதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டிற்கு வந்தனர். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் (சி.ஐ.எஸ்.எப்) வந்திருந்தனர். காரில் வந்த அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து சென்று லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அவரது ஹோமியோபதி கல்லூரி மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதேபோல மற்றொரு குழுவினர் கோவை கிராஸ்கட் ரோடு 6-வது வீதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்டினின் மற்றொரு அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தினர் .இந்த சோதனையின் போது வீடு மற்றும் அலுவலகத்திற்குள் வேறு நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை .அதேபோல வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வீடு மற்றும் அலுவலகம் முன்புதுப்பாக்கி ஏந்தியவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோன்று சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள லாட்டரி அதிபர் மார்டின் மருமகன் ஆதவ் அர்ஜுன் அலுவலகம் மற்றும் மார்டின் வீட்டில் 6 பேர் கொண்ட குழுவாக அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தீவிரசோதனை நடத்தினர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேட்டில் மார்ட்டின் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் முறைகேடாக சம்பாதித்த ரூ910 கோடியை 40 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரின் ரூ 450 கோடி அசையா சொத்துக்களை ஏற்கனவே முடக்கி உள்ளது ,இந்த நிலையில் மீண்டும் கோவையில் 4 இடங்கள் | சென்னையில் 2இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..