வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா வின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள இதய தெய்வம் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் சங்க அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவியின் திரு உருவப்படத்திற்கு தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலை வர் வால்பாறை வீ.அமீது தலைமையிலும் அதிமுகவின் நகரகழகத்தின் சார்பாக வால் பாறை அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு நகரச்செயலாளர் ம.மயில்கணேசன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகரகழக துணைச் செயலாளர் எஸ்.பி.பொன்கணேசன், மாவட்ட பாசறை இணைச்செயலாளர் அ.சலாவுதீன், நகர் அவைத்தலைவர் சுடர்பாலு நிர்வாகிகள் கூட்டுறவு வங்கி செந்தில் அண்ணாதுரை, சி.டி.சி.செந்தூர்பாண்டி, மெடிக்கல் கணேசன், சாய் கிருஷ்ணன், சசிக்குமார், எம்.ஆர் .எஸ்.மோகன், எஸ்.கே.எஸ்.பாலு மற்றும் கட்சி நிர்வாகிகளும், தொழிற்சங்க நிர்வாகி களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.