ஆட்டோவில் தூங்கிய டிரைவர் மரணம்..

கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 58) இவர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்திற்கு மாணவ – மாணவிகளை ஏற்றி செல்லும் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மாலை நேரங்களில் ஆட்டோவும் ஓட்டினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஆட்டோவை தனது வீட்டின் அருகே நிறுத்திவிட்டு ஆட்டோக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர் நேற்று காலையில் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது .இது குறித்து அவரது மனைவி லதா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.