ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் திமுக அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பக்தி பரவசத்துடன் புனித தீர்த்தமாடினார்.ராமேஸ்வரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் கழிப்பறை குடிநீர் சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு புகார் வந்துள்ளது.இதையடுத்து ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக இன்று (செப்.,21) மஹாளய பட்சத்தையொட்டி காலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தனுஷ்கோடி சென்ற அவர், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்தார்.திமுக இரட்டை வேடம்பின்னர் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடிய பின்பு, ராமநாதசாமி ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். ஒருபுறம் திமுக எம்.பி., ஆ.ராசா ஹிந்து மதத்திற்கு விரோதமாகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் அவதூறாக பேசி வருகிறார்.இதற்கு ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியிருக்க, இன்னொருபுறம், திமுக அமைச்சர் அன்பில் பொய்யாமொழி ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்தமாடியுள்ளார். ஹிந்து மத எதிர்ப்பு முகத்தை காட்டும் திமுக.,வினர் ஹிந்து மத பக்தர்களாகவும் இன்னொரு முகத்தை காட்டுவது அவர்களது இரட்டை வேடத்தை வெளிப்படுத்துவதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0