நீலகிரி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 135 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், (10.03.2025) நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட  ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும்
மாற்றுதிறனாளிகளிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், குடிசை மாற்று வாரிய வீடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 135 மனுக்களை பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) / மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் சுரேஷ்கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர்
சரவணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பழனிச்சாமி, சாய் சரண் ரெட்டி இ.வ.ப., (பயற்சி) வனம், உட்பட அரசுத்துறை அலுவலர்கள்பலர் கலந்து கொண்டனர்,.