கோவை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்,மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்கள், இதில் கடந்த 2009 ம் ஆண்டு கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் மேலும் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்க்கொள்ள பட்டது, ஆனால் அடுத்து வந்த அதிமுக கட்சி ஆட்சி காலத்தில் அது ஆமை வேகத்தில் நகர்ந்து வந்தது, தற்போது திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் தலைமை யில் ஆட்சியில் பல்வேறு துரித நடவடிக்கை எடுத்து, கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்ய தேவையான அளவு நிலம் கையகப்படுத்தும் பணியை விரிவு படுத்தி விரைந்து முடிக்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு இட்டார், அதன்படி கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் முதல்வர் அறிவித்த படி கோவை சர்வதேச விமான நிலையமாக மாற்ற படும் என்று கூறி அறிக்கையை உறுதி படுத்தி அதனை நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை பொதுமக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பேசினார் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு தேவையான நிலம் தற்போது 97%சதவீதம் கையகபடுத்த பட்டு உள்ளது, மேலும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவை 662 ஏக்கர் நிலம் முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் கையகபடுத்தும் பணிகள் விரைந்து முடிக்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு படி பணிகள் வேகமாகவும் துரிதமாக நடக்கிறது இதில் 97% சதவீத இடம் பெற்று விட்டோம் இதில் 16ஏக்கர் உடைய உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதில் அவர்களிடம் நிலம் பெறுவதில் எந்த தடையும் இருக்காது என்றார், மேலும் 29ஏக்கர் புறம்போக்கு இடமும் விரிவாக்க இடத்தில் உள்ளடக்கி வருகிறது அதையும் தற்போது தேவைக்கு எடுத்து உள்ளோம் மேலும் மொத்தத்தில் மூன்று ஏக்கர் நிலம் பரப்பளவு வைத்து உள்ள மூன்று நில உரிமை யாளர்கள் விமான நிலைய விரிவாக்கம் செய்ய இடம் தரமறுத்து வந்தனர் அவர்களும் தற்போது தர முன் வர உள்ளனர் ஆகவே கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான இடத்தை பெற்று விட்டோம், தொடர்ந்து மத்திய விமான நிலை துறை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தும் விட்டோம் இனி தாமதம் இன்றி கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் நடக்க மாவட்ட நிர்வாகம் மத்திய அரசு கேட்கும் உதவிகளை செய்து வருகின்றோம் என்றார், ஆக இன்னும் சில மாதங்களில் கோவை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாற்றம் காண போகுது, ஐய் இனி உலக நாடுகள் சுற்றுலா செல்லலாம்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0