நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பிக்கட்டி பேரூராட்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சித்தலைவர்

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பிக்கட்டி பேரூராட்சி பகுதிகளில், ரூ.69.10 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும், ரூ.40.80 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று முடிவடைந்த பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் பிக்கட்டி பேரூராட்சி, குந்தா கோத்தகிரி பகுதியில், “குழந்தை கள் நல பள்ளி மேம்பாடு திட்டத்தின்கீழ்”, ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடப்பணியினையும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.4.20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை பணியினையும், உதகை ஊராட்சி ஒன்றியம், இத்தலார் ஊராட்சியில், “சிறப்பு நிதி திட்டத்தின்கீழ்”, ரூ.3.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டட கட்டுமான பணி என மொத்தம் ரூ.40.80 இலட்சம் மதிப் பீட்டில் நடைபெற்று முடிவடைந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், முள்ளிகூர் ஊராட்சி, எமரால்டு பகுதியில் “கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின்கீழ்” ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணியினையும், இத்தலார் ஊராட்சி, அப்புக்கோடு பகுதியில் “சிறப்பு நிதி திட்டத்தின்கீழ்”, ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலக கட்டட கட்டுமான பணியி னையும், போர்த்தி பகுதியில் “முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்”, ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் போர்த்தி விளையாட்டு மைதான சாலை மேம்பாட்டு பணியினையும், போர்த்தி பகுதியில் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்”, ரூ.3.60 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் பணிகள் என மொத்தம் ரூ.69.10 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார், தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உதகை ஊராட்சி ஒன்றியம், முள்ளிகூர் ஊராட்சி, எமரால்டு பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், சேதமடைந்த குடிநீர் திட்ட குழாய்கள் மற்றும் பாலம் பணிகளுக் காக ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து, செயல் பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (நிர்வாகப் பொறியாளர்) செல்வகுமார், உதவி பொறியாளர்கள் சங்கீதா, சித்ரா, குந்தா வட்டாட்சியர் சுமதி, உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, சுரேஷ், பிக்கட்டி பேரூராட்சி தலைவர் சந்திரலேகா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.