நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் (08.01.2025) துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்திற் குட்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, ஊராட்சி செயலர்களின் கடமைகளும், பொறுப்பு களும், ஊராட்சி பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் செலவு சீட்டுகள் பராமரித்தல், அணைத்து திட்ட பணிகள் தேர்வு மற்றும் நிர்வாக அங்கீகாரம் தொடர்பான பொதுவான விவரங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், சமூக தணிக்கை, இணையதள வரிவசூல் செயலியின் செயலாக்கம் போன்றவற்றை குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது, இப்பயிற்சியில் வழங்கப்படும் அனைத்து விவரங்களை, ஊராட்சி செயலர் கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முழுமையாக தெரிந்துக் கொண்டு, நன்கு பணிபுரிய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இப்பயிற்ச்சியில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், சலீம், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட வள அலுவலர், (சமூக தணிக்கை) சசி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்பில் பயிற்ச்சிகளை வழங்கினார்கள்,.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0