கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள லட்சுமி நகரில் மலையடி வாரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராம்நகர் விவேகானந்தா ரோட்டை சேர்ந்த ராம்கி ( வயது 29) என்பவர் மாதம் ரூ.15, ஆயிரத்துக்கு ஒருவீட்டை வாடகை எடுத்தார். அதில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக வடவள்ளி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது இன்ஸ் பெக்டர் பிராங்கிளின் விபச்சார விடுதி தொடங்கிய முதல் நாளிலே அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதை நடத்திய ராம்கி (வயது 29)கைது செய்யப்பட்டார். மேலும் அங்கிருந்த திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ரோகினி ( வயது 20) ஊத்துக்குளி உதயா ( வயது 20) திருப்பூர் சிக்கன்னா கல்லூரி ரோடு ஜெனிபர் ( வயது 22 )ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3பெண்களும் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். ராம்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0