நீலகிரி மாவட்ட நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் அஇஅதிமுக 8வது வார்டு நகர மன்ற உறுப்பினர் லயோலா குமார் நகரமன்ற கூட்டத்தில் முன்வைத்த விவாதம் எட்டாவது வார்டு பகுதி தோப்பளைன் சாலை அருகே தற்போது பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து மண் சரிவு ஏற்படாமல் இருக்க மதில் செவர்கள் கட்டுவதற்கான தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன, இதனைத் தொடர்ந்து மேட்டுச்சேரி பாஜா நகர் பகுதியில் நடைபாதை மின்விளக்கு குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்பதை பலமுறை நகரமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது, தற்போது தான் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்கள் என்றார் , மற்றும் மேட்டுச்சேரி பகுதியில் டெண்டர் அறிவிக்கப்பட்டு 10 லட்சம் மதிப்பிலான பணிகள் அப்பகுதிகள் செய்து தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதுவரை பாரதியார் நகர் மேட்டுச்சேரி பகுதியில் நடைபாதியே இதுவரையில் இல்லை வனப்பகுதியாய் உள்ளதால் மக்கள் நாள்தோறும் அவ்வழியில் நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதை அறிந்து நகர மன்ற உறுப்பினர் லயோலா குமார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களின் கோரிக்கையில் ஏற்றுக்கொண்டு இரண்டு வருடங்களாக தொடர்ந்து நகர மன்ற கூட்டத்தில் முன்வைத்து பேசியதின் பெயரில் தற்போது அதற்கான பணிகளை நகராட்சி செய்து தர டெண்டர் வழங்கப்பட்டுள்ளது, மற்றும் அங்கு உள்ள சுடுகாடு பகுதி முழுவதையும் மதில் சேவர் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கைகள் பல மாதங்களுக்கு முன்னதாக வைக்கப்பட்டன, பாராளுமன்றத் தேர்தலினால் ஒரு சில மாதங்கள் கூட்டங்கள் நடைபெறாததால் தற்போது நடைபெற்று கூட்டத்தில் தீர்மானங்கள் முன்வைத்ததை ஏற்றுக்கொண்டு நகராட்சி ஆணையம் அனைத்து கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக பணிகள் செய்து தரப்படும் என்று பதில் அளிக்கப்பட்டது, எட்டாவது வார்டு பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரையிலும் சரியாக செய்து தரப்படவில்லை அப்பகுதி 8வது வார்டு நகர மன்ற உறுப்பினர் லயோலா குமார் இரண்டு வருடங்களாக நகர மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்ததின் பெயரில் தற்போது அப்பகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளுக்காக பழுதடைந்த சாலைகள் போடுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது, 8வது வார்டு அதிமுக நகர மன்ற உறுப்பினர் லயோலா குமார் அப்பகுதியில் மக்களின் அனைத்து கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைபெறுகின்ற நகர மன்ற கூட்டத்தில் முன்வைத்து தங்கள் பகுதிகளில் இருக்கும் மக்களின் அடிப்படை வசதிகளின் செய்து தருவதே எனது முதல் நோக்கம் என்று தெரிவித்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0