பிலிப்பைன்ஸை தலைகீழ் மாற்றிய “நால்கே புயல்” – பலி எண்ணிக்கை 100-க்கு மேல் உயர்வு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் நால்கே புயல் கடந்த வாரம் தாக்கியது.
இதில் தெற்கு பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நால்கே புயல் தாக்கியது. புயல் ஆனது தெற்கு பகுதியில் உள்ள பகுதிகளில் குறிப்பாக மகுயிண்டனாவ் பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
புயலில் சூறாவளி காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்து மேற்கூரைகள் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டன. புயலைத் தொடர்ந்து கனமழை பெய்ததால் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி வெள்ள காடாக காட்சியளித்தது.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் கட்டிடங்கள் நீரில் மூழ்கியது. மேலும் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மண்ணில் புதைந்தது. இதில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி 69 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 63 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்த புயலால் பல லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக நாட்டின் அரசு கூறியுள்ளது. இந்நிலையில் புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100- யை தாண்டி உயர்ந்துள்ளது.
நால்கே புயலால் மேற்கத்திய பகுதிகளில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க அந்நாட்டு ராணுவம் களமிறங்கி உள்ளது. பணிகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.