தந்தை இறந்த தூக்கம் தாங்காமல் மகள் தூக்கு போட்டு தற்கொலை .

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள குஞ்சி பாளையம்,நாச்சியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. அவரது மனைவி சசிகலா (வயது 48) பவுர் லும் தொழில் செய்து வந்தார். இவரது தந்தை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த சசிகலா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மகன் மதன்குமார் பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.