நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமை யில் (24.01.2025) நடைபெற்றது. மேலும், விவசாய சங்கங்களிடமிருந்து முன்னதாகவே பெறப்பட்ட 30 கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டு, நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அந்த மனுக் களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பதில்களாக விவசாயிகளுக்கு தெரி விக்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது –
நீலகிரி மாவட்டத்தில், உதகையில் இரண்டாவது உழவர் சந்தை அமைக்க சாத்திய கூறுகளை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும், வேளாண் வணிகத்துறை
அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உழவர் செயலி பயன்பாடு குறித்த
பயிற்சியினை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிராம ஊராட்சிகளில் மட்டும் செயல்படுத்தப்படும் கால்நடை கொட்டகைகள் அமைக்கும் திட்டத்தினை பேரூராட்சி மற்றும் நகராட்சி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்த அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு ள்ளது. விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி தீவனப் பயிர்களின் வரவு, விவசாயிகளின் தேவை போன்றவற்றை கலந்துரையாடி அவ்வறிக்கையினை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரி வித்தார்,மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கூட்டத்திற்கு பின்னர்
“நானோ உரப்பயன்பாடு” குறித்த பயிற்சியானது விவசாயிகளுக்கு IFFCO நிறுவனத் தின் மூலம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, துணை இயக்குநர் ஆம்ரோஸ் பேகம், ஆவின் பொது மேலாளர் ஜெயராமன் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் நீலகிரி பல பகுதிகளில் இருந்து விவசாயிகள், மற்றும் நீலகிரி மாவட்ட குறை தீர்க்கும் விவசாய சங்க மாவட்டத் தலைவர் கே பிரகாஷ் மற்றும் சங்கு நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் விவசாய கோரிக்கைகள் மட்டும் சிரமங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும், தோட்டக் கலைத் துறை சார்ந்த அதிகாரிகள் மத்தியில் விளக்கமாக எடுத்துரைத்து அதற்கான தீர்வுகளை விவசாயி எங்களுக்கு செய்து தர வேண்டும் என்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது, நடைபெற்ற கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0