ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்வழிப் படுத்தும் நோக்கத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இப் போட்டியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெற்ற 64 அணிகளும் காவல் துறையைச் சேர்ந்த 16 அணிகளும் கலந்து கொண்டு விளையாடினர். இந் நிலையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பிரிவில் பிரண்ட்ஸ் சி சி மற்றும் எம் 4 பாய்ஸ் அணிகளும் காவல்துறை துறை பிரிவில் ஆர்சி ஆவடி மற்றும் ஸ்போர்ட்ஸ் டீம் போலீஸ் அணியும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இரண்டு பிரிவைச் சேர்ந்த அணிகளுக்கு ம் இறுதிப்போட்டி ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பிரிவில் வெற்றி பெற்ற பிரண்ட்ஸ் சிசி அணி முதல் இடத்தையும் எம் 4 பாய்ஸ் அ ணி இரண்டாம் இடத்தையும் ஜாலி பிரதர்ஸ் அணி மூன்றாம் இடத்தையும் பிளாக் பல்ஸ் அணி நான்காம் இடத்தையும் பெற்றன. மேலும் காவல்துறை பிரிவில் வெற்றி பெற்ற ஆர்சி ஆவடி அணி முதல் இடத்தையும் ஸ்போர்ட்ஸ் டீம் போலீஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. பிரம்மாண்ட போதை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியின் நிறைவு விழா ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களின் தலைமையில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் காவல் ஆணையாளர் பங்கேற்று முதல் நான்கு இடங் களைப் பிடித்த அணிகளுக்கு வெற்றி கோப்பைகளும் ரொக்க பரிசுகளும் வழங்கினார். மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு கேடயங்கள் மற்றும் ரொக்க பரிசுகளும் வாங்கினார். நிறைவு விழாவில் சிறப்பு ஏற்பாடாக திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்ற விஜய் டிவி புகழ் மா. கா.பா. ஆனந்த் தலைமையிலான அணி மற்றும் காவல் துறை அணிகளுக்கு இடையே சிறப்பு கிரிக்கெட் போட்டியும் மௌன ராகம் முரளி பங்கேற்று போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பாடலையும் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0