நீலகிரி உதகையில் உள்ள முதல் கத்தோலிக்க ஆலயத்தில் கிறிஸ்துமஸ் இரவு திருப்பலி கடும் உரைப்பணி குளிரில் நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. இரவு 11 மணிமுதல் 12 மணிவரை கரோல் பாடல்கள் பாடப்பட்டன, பின் 12 மணிக்கு பங்கு குரு செல்வநாதன் குழந்தை ஏசு சுரூபத்தை கையில் ஏந்தி ஆலயத்தின் முன் புறம் இருந்து பீடத்தை நோக்கி எடுத்து வர பாரம்பரிய பாடலான ‘சைலன்ட் நைட் ஹோலி நைட்’ பாடல் பாட குழந்தை ஏசு பீடத்தில் வைத்து புனித படுத்தி உதவி பங்கு குரு டிக்சன் குழந்தை ஏசு சுரூபத்தை மாட்டு தொழுவத்திற்கு எடுத்து சென்று வைத்து தூபமிட்டு குருக்கள் வணங்கி வழிபட்டனர். பின்னர் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது . முன்னதாக வெள்ளை அமைதி கேண்டல் ஏற்றிவைக்கப்பட்டது . ஏராளமான பங்கு மக்கள் மற்றும் உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் நள்ளிரவு திருப்பள்ளியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர், நடைபெற்ற காலை 9 மணி திருப்பலி நீலகிரி மாவட்ட உதகை முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் அவர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது, செயின்ட் மேரிஸ் ஆலயத்தின் பங்குத்தந்தை செல்வ நாதன் ஏற்பாட்டில் சிறப்பு கிறிஸ்மஸ் பாடல்கள் மற்றும் வாழ்த்துக்கள் நிறைவேறப் பட்டன, கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் கிறிஸ்மஸ் சிறப்பு செய்தியை வழங்கி திருப்பள்ளியை நிறைவேற்றினார், அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கு கிறிஸ்துவின் திருவுடளான அப்பம் பகிரப்பட்டது, திருப்பலியின் நிறைவாக பங்குத் தந்தை செல்வநாதன் முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார், மற்றும் பங்கு மக்களுக்கும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் அனைத்து பணிகளை செய்த அனைவருக்கும் மற்றும் ஒரு மாத காலமாக பூபாளம் பாடிய அனைத்து இளைஞர் சங்கத்திற்கும், ஆலயத்தில் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தார், மற்றும் காலை 9 மணி திருப்பதியில் ஏராளமான பங்கு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திருப்பள்ளியில் கலந்து கொண்டனர் கிறிஸ்டோபர் லாரன்ஸ் இறுதி ஜெபத்துடன் அனைவரையும் ஆசீர்வதித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் வழங்கினார்,
ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் மின் விளக்குகளால் அலங்கரிக்க பட்டிருந்தது .
அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு குருக்கள் வேதியர் நாதன் மற்றும செயின்ட் மேரிஸ் தேவாலயத்தின் இளைஞர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைத்து ஏற்பாடு களையும் செய்து, திருப்பலிக்கு வந்த அனைவருக்கும் தேநீர் மற்றும் கேக்குகள் வழங்கி வாழ்த்தினர்,.