திருச்சி சிறுகாம்பூரில் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலமாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகாம்பூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப் பெற்ற 24 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார் அருகில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுப் பணித்துறை அமைச்சர் எ வ வேலு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலாளர் பள்ளி கல்வித்துறை டைரக்டர் ஆகியோர் உள்ளனர். திருச்சி சிறுகாம்பூர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய வகுப்பு கட்டிட அறையினையும் பள்ளி வளாகத் தையும் நேரில் பார்வையிட்டார். நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் பொதுப்பணித்துறை செய ற்பொறியாளர் நாகவேலு உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆசிரியப் பெருமக்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.