உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் 40 நாள் நோன்பு தவக்காலத்தை முன்னிட்டு சாம்பல் புதன் அனுசரிப்பு..
வருடந்தோறும் உலகம் முழுவதுமுள்ள அனுசரிக்கப்படுகின்றன
இதனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் தவ காலம் சாம்பல் புதனில் இருந்து துவங்குகிறது .
நாற்பது நாள் நோன்பு தவம் அனுசரிக்கும் கிறிஸ்தவர்கள் ஏசுவின் பாடுகள் சிலுவை மரணம் அவரின் உயிர்ப்பை தியானித்து ஆலயங்களில் சிறப்பு நற்செய்தி கூட்டங்கள் வழிபாடுகள் திருப்பலி மற்றும் சிறப்பு சிலுவை பாதை நடைபெறுவதை தொடர்ந்து ஊட்டி செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் பங்கு குரு செல்வநாதன் தலைமையில் உதவி பங்கு குரு பிரெட்ரிக் மற்றும் டீக்கன் ஞனசெல்வம் இணைந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றி சாம்பலை புனித படுத்தி
திருப்பலியில் பங்கேற்ற அனைவரின் நெற்றியில் பாவத்திலிருந்து மனம் திரும்பி கடவுளின் வார்த்தையை நம்பி வாழு என்று அடையாளம் இட்டார். திருப்பலி தொடர்ச்சியாக அனைவரும் திருவிருந்தில் பங்கு கொண்டு, சிறப்பு பிரார்த்தனை ஆசிர்வாத்தோடு திருப்பலி நிறைவு பெற்றது. 40 நாள் நோன்பிருந்து கேரளா குருசுமலை இடங்களுக்கு தவமாக செல்லும் அனேக கிறிஸ்தவ மக்கள் என்று உறுதி ஏற்றுக்கொண்டு 40 நாள் நோன்பு தொடங்கியுள்ளன, அவர்களை பங்கு குருவானவர் ஆசீர்வதித்து நோன்புக்கான வழிமுறைகளை அறிவுறுத்த கூறி நோன்பு தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட முழுவதிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபை ஆலயங்களில் தவக்கால 40 நாள் நோன்பு அனுசரிப்பு இன்றிலிருந்து துவங்கப்பட்டது. திருப்பலி சிறப்பு ஆராதனை நோன்பு நாட்கள் தவா அனுசரிப்பு அனைத்து ஆலயங்களிலும் இன்று துவங்கியது, இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்,
What’s your reaction?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0