கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் செல்லும் ஊசிமலை கைகாட்டி அருகே மற்றும் அக்கா மலை எஸ்டேட் ஊமையாண்டி முடக்கு ஆகிய பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சாலையோரங்களில் அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்து அவ்வழியாக செல்லும் பேருந்து மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது இந்நிலை குறித்து சம்பந்தப்பட்ட வால்பாறை நகராட்சி நகர் மன்ற தலைவரிடம் முட்புதர்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டதைத்தொடர்ந்து நேற்றைய தினம் நகராட்சி பணியாளர்கள் துரிதமாக பணிசெய்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டது எனவே துரித நடவடிக்கை மேற்க் கொண்ட நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், 12 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இ.ரா.சே.அன்பரசன் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் பேருந்து மற்றும் வாகன ஓட்டுனர்களும் அப்பகுதி பொதுமக்களும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0