மூளையில் ரத்த குழாய் வெடிப்பால் கோமாவில் இருந்த பெண் நோயாளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் நுண்ணறிவு அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து நரம்பியல் அறுவைசிகிச்சை துறையில் முதுநிலை நிபுணர் டாக்டர். என். அருண்குமார் தலைமையில், மயக்கமருந்தியல் துறையின் தலைர் டாக்டர். ஜி அரிமாணிக்கம் கூறியதாவது: சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கு இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு 6 மணி நேரம் நீடித்த இந்த சிக்கலான அறுவைசிகிச்சையை சுமார் 5 மிமீ நீளமுள்ள PICA அழற்சி பகுதியினை கிளிப் கொண்டு மூடி இரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது. இந்த நுண்அறுவைசிகிச்சை செயல்முறையின் போது, மண்டையோட்டின் மீது ஒரு சிறிய துளையிட்டு, வீக்க அழற்சி ஏற்பட்டுள்ள இரத்தக்குழாயின் திறப்பு பகுதி மீது ஒரு உலோக கிளிப்பை பொருத்தி, அதற்கு செல்லும் இரத்தப்போக்கை மருத்துவர்கள் தடுத்து நிறுத்தினர். பாதிப்படைந்த இரத்தக்குழாயில் கிளிப் பொருத்தப்பட்டவுடன் அவ்வீக்கம் படிப்படியாக குறைந்து சிறிதாகி அதன் பின்பு முற்றிலுமாக நீங்கிவிடும் சிகிச்சை இது. PICA அழற்சி பாதிப்புகள் என்பது, அறுவைசிகிச்சை நிபுணர்களால் அணுகி சிகிச்சையளிப்பதற்கு சிரமமானது என்பதால், இந்த அறுவை சிகிச்சை அதிக சவாலானது. இருப்பினும், மீனாட்சி மருத்துமனையின் அனுபவமும், திறனும் கொண்ட மருத்துவ நிபுணர்களால் எவ்வித சிக்கல்களுமின்றி வெற்றிகரமாக நடைபெற்ற இந்த அறுவைசிகிச்சையினால் அந்நோயாளி இப்போது பாதுகாப்பாக நலமுடன் இருக்கிறார். அறுவைசிகிச்சைக்கு பிறகு எவ்வித சிக்கல்களோ அல்லது ஊனங்களோ ஏற்படாததால் இப்பெண்மணி இப்போது நடமாடவும் தொடங்கிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, பேசிய டாக்டர். அருண்குமார், “சிறுமூளையிலுள்ள இரத்தநாளம் வீக்கமடைந்து கிழிவதனால் அது மூளையில் இரத்தக்கசிவை ஏற்படுத்துகிறது மற்றும் உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசரநிலை நிகழ்வாக அது மாறுகிறது. சுற்றியுள்ள மூளைத்திசுக்களில் இரத்தம் சிந்தும்போது நிரந்தரமான மூளைச் சேதத்தை அல்லது வலிப்புத்தாக்கம் மற்றும் கோமா போன்ற பிற சிக்கல்களை அது விளைவித்துவிடும். PICA அழற்சிகள் என்பவை மிக அரிதானவை; மூளையில் ஏற்படும் அழற்சிகள் அனைத்திலும் இதன் பங்கு 3% – க்கும் குறைவானதே. இந்நோயாளிக்கு வழங்கப்பட்ட சிகிச்சையைப் பொறுத்தவரை 6 மணி நேரம் நடைபெற்ற அறுவைசிகிச்சையில் ஒரு கிளிப்பை பயன்படுத்தி இரத்தக்கசிவை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கண்காணிப்பாளர் டாக்டர். இரவிச்சந்திரன் மயக்கமருந்தியல் டாக்டர் கள் உடனிருந்தனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0