தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் தில்லை நகரைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் தனது மகன் மனோஜ் குமாரை காணவில்லை என கடந்த 30.12.2013 அன்று தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். காவல் நிலையத்தில் காணவில்லை என வழக்கு பதிவு செய்தனர். அப்போதைய காவல் நிலைய ஆய்வாளர் அப்துல் ரஹீம். தற்போதைய ஓய்வு பெற்ற டிஎஸ்பி. என்பவர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மனோஜ் குமார் என்பவர் சில அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப் பட்டார் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையின் அடிப்படையில் பிரபல பயங்கர ரவுடியான வெடி என்கிற கோபி வயது 35.தகப்பனார் பெயர்செல்வராஜ். முனியாண்டவர் காலனி தஞ்சாவூர்.மற்றும் அவனது கூட்டாளியான. முத்து என்கிற பிரசாத் வயது 37. நேரு நகர் விளா ர் ரோடு தஞ்சாவூர் இவர்கள் இருவரும் மனோஜ் குமாரை காதல் விரோத தகராறில் கொலை செய்துள்ளனர் என தெரிய வந்தது. பின்னர் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு பிறகு 1.4..2015அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர்களின் 11 வருடமாக வழக்கு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சத்திய தாரா என்பவர் குற்றவாளிகளுக்கு வெடி என்கிற கோபி மற்றும் பிரசாத் ஆகியோருக்கு ரூபாய் 10,000 அபராத தொகையுடன் இரட்டை ஆயுள் தண்டனையும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2000 அபராத வி தித்து தீர்ப்பு கூறினார். மேலும் பயங்கர ரவுடியான வெடி கோபி. ஆறு கொலை மற்றும் ஐந்து கொலை முயற்சி வழக்கு 27 வழக்குகளில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0