ரஜோரி: காஷ்மீரில் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்த முயன்ற தற்கொலை படை தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அதில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர். 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரியின் தர்ஹல் பகுதியில் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையின் முகாம் உள்ளது. இங்கு புகுந்த 2 பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். கடந்த 2019ம் ஆண்டு யுரியில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிகழ்வு போல் தற்போதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.
உடனடியாக உஷாரடைந்த இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். அதில் 2 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர். ஒரு அதிகாரி மற்றும் ஜவான் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து அந்த முகாமில் தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நெருங்கி வரும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால், காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.