ஆந்திர மாநிலம் எலுரு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.
ஆந்திர பிரதேச மாநிலம்,ஏலூரில் உள்ள அக்கிரெட்டிகுடேமில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும்,முதல்வர் மற்றும் ஆளுநரின் அறிக்கையின்படி,தீ விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்தனர் மற்றும் 6 பேர் இறந்தனர் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து,நைட்ரிக் அமிலம்,மோனோமெதில் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஏலூர் எஸ்பி ராகுல் தேவ் சர்மா தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும்,சிறிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில்,ஆந்திர மாநிலம் எலுரு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக, பிரதமர் கூறியதாவது:”ஆந்திர மாநிலம் எலுருவில் உள்ள ரசாயனப் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது.இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்”,என்று தெரவித்துள்ளார்.