உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றவுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார்.
ஏனென்றால் அதற்கு முன்பாக உத்திரபிரதேசத்தில் ரவுடிகளின் சாம்ராஜ்யம் அதிக அளவில் இருந்து வந்தது. எங்கு பார்த்தாலும் கொள்ளை, பாலியல் பலாத்காரம், கொலை என குற்றங்கள் அதிக அளவில் காணப்பட்டது. இதற்கிடையே பெரும்பாலான ரவுடிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும், அரசியல் செல்வாக்கு அதிகம் இருந்ததால் போலீசாரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கி வந்தனர்.
இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சி காலத்தில் ஆறு ஆண்டுகளில் பத்தாயிரம் என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாக அந்த மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மீரட்டில் 3.152 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் கூட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உத்திரபிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை பாராட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.