குளத்தில்மூழ்கி கோவில் பூசாரி சாவு.

கோவை அருகே உள்ள பெரியமத்தம் பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 38) கோவில் குருக்களாக உள்ளார். நேற்று இவர் மத்தம்பாளையத்தில், திகம்பரேஸ்வரர் கோவில் அருகே உள்ள கருப்பராயன் குளத்துக்கு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.