மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பரிதாப சாவு..

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தென்னமநல்லூர், புதூர், வடக்கு வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார் ( வயது 33) இவர் நஞ்சுண்டாபுரம் மாரியம்மன் கோவில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.அங்குள்ள பெருமாள் கோவில் வீதியில் முனியப்பன் கோவிலில் உள்ள ஒரு அறையில் தங்கி உள்ளார்.நேற்று அவர்தங்கி இருந்த அறையில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.