ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் போலீஸ் பயிற்சி மைதானத்தில் நேற்று மாலை தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தலைமையில் ‘விஜய சங்கல்ப சபை’ எனும் பெயரில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி முதலில் தெலுங்கில் பேசி தனது உரையை தொடங்கினார். பின்னர் அவர் ஹிந்தியில் பேசியதாவது. தெலங்கானா மண் ஒரு வீரம் மிக்க மண் மட்டுமின்றி ஆன்மீக மண்ணும் கலந்துள்ள பூமியாகும்.
தெலங்கானாவுக்கு அனைத்து மத்திய அரசின் திட்டங்களும் அமல்படுத்தப்படுகிறது. விரைவில் ஹைதராபாத்தில் டெக்ஸ்டைல்ஸ் பார்க் அமைக்கப்படும். மேலும், ரூ.1,500 கோடி செலவில் ரிங் ரோடு, பைபாஸ் சாலைகள், பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி வழங்கியுள்ளது. தெலங்கானாவில் விரைவில் பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமைய உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். முன்னதாக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உட்பட அனைவரும் ஹைதராபாத் எனும் பெயரை, ‘பாக்ய நகரம்’ என்றே அழைத்தனர் என்பது குறிப்பிட தக்கது.