பேராசிரியர்களுக்கான கற்பித்தல் மேம்பாட்டுப்பயிற்சி

கோபி ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் கல்லூரியில் இணைந்த புதிய பேராசிரியர்களுக்கான வழிகாட்டல் பயிற்சி மற்றும் கற்பித்தல் மேம்பாட்டுப்பயிற்சி ஜீன் 10 மற்றும் 11 இரண்டு நாட்கள் உள்தர நிர்ணய பிரிவால் நடத்தப்பட்டது.

இதன் முதல்நாள் நிகழ்வில் துணைமுதல்வர் மற்றும் உள்தர நிர்ணய பிரிவு இயக்குனருமான முனைவர் சி.நஞ்சப்பா வரவேற்புரை வழங்கி இதன் நோக்கம் பற்றி அறிமுக உரை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ஆ.மோகனசுந்தரம் கல்லூரி விதிமுறைகள், தேர்வுமுறைகள் பற்றி உரையாற்றினார்.

முனைவர்.சி.நஞ்சப்பா, முனைவர்.S.மஞ்சு, திரு.சுரேஷ்குமார், திரு.வடிவேலு ஆகியோர் மாணவர்களுக்கான வழிகாட்டல், விதிமுறைகள், மாணவர் திறன் மேம்பாடு, கணினி வழிப்பயிற்றுவித்தல் பற்றி கருத்துரை வழங்கினர்.

இரண்டாம் நாளில் திரு. V.N.ரங்கசாமி, ஆங்கில திறன் பயிற்சியாளர், கற்பித்தலில் ஆங்கிலத்தின் முக்கியத்தும் பற்றிப்பேசினார். அடுத்தாக வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் முனைவர் R. நந்தகுமார் அவர்கள் கற்பித்தலில் உடல் மற்றும் மன உறுதியின் பங்கு பற்றியும், உணவு முறையில் உடலை மேம்படுத்துதல், மனதை உறுதிப்படுத்தி அறிவை வளர்த்தல் பற்றிய விரிவான உரையாற்றினார்.

முனைவர்.ந.சக்திவேல், துறைத்தலைவர், தொழில் முறைக்கணக்கியல் துறை, கோபி கலை அறிவியல் கல்லூரி, மற்றும் முனைவர்.S.பிரசாத், உதவிப்பேராசிரியர், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் அறிவியல் துறை, விஇடி கல்லூரி, ஈரோடு ஆகியோர் துறை ரீதியான சிறப்புரை வழங்கினர். இறுதியாக ஆங்கிலத்துறைத்தலைவர் முனைவர்.வை.சிவகுருவிக்னேஷ் நன்றியுரை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை முனைவர்.சி.நஞ்சப்பா, முனைவர்.S.மஞ்சு, முனைவர்.வை.சிவகுருவிக்னேஷ், திரு.சுரேஷ்குமார், மற்றும் உள்தர நிர்ணய பிரிவு உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.