முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நிறுவனத்தை கண்டித்து தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் அண்ணா சிலை முன்பு செய்தித்தாளை எரித்து போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பகுதி செயலாளர்கள் நீலகண்டன், மேத்தா, சதாசிவம், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஒன்றிய செயலாளர்கள் அருளந்தசாமி, உலகநாதன், நாகராஜ், செல்லக்கண்ணு, ஜெயராமன், திமுக மாநில மகளிர் அணி துணை ஆலோசகர் கார்ல் மார்க்ஸ்,34வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுந்தர. செந்தில், 32வது வார்டு மாமன்ற உறுப்பினர் தி.லெனின் ஆகியோர் கலந்து கொண்டு தினமலர் செய்தித்தாளை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.