தமிழ்நாடு சுற்றுலா தகவல் களஞ்சியத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்- அமைச்சர் பெற்றுக் கொண்டார்.!

தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையும் இந்து குழுமமும் இணைந்து தயாரித்துள்ள FORTS OF TAMIL NADU – A WALK – THROUGH என்ற சுற்றுலா தகவல் களஞ்சியத்தை வெளியிட்டார். உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் B. சந்திர மோகன் மற்றும் சுற்றுலா ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சி. சமயமூர்த்த, ஆகியோர் முன்னிலையில் சுற்றுலா தகவல் களஞ்சியத்தை தமிழ்நாட்டின் முதல்வர் வெளியிட்டார். அதனை சுற்றுலாத் துறை அமைச்சர் பெற்றுக் கொண்டார்