திருச்சியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுஎண் 35 மண்டலம் மூன்றில் செந்தனியபுரம் பகுதிக்குட்பட்ட முத்து மணி டவுன் தெருவில் சுமார் 450 வீடுகள் உள்ளது இந்த பகுதி யில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று அமைத்து தருமாறு பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் மேலும் அந்த கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்ட ரூ 11 லட்சம் மதிப்பீட்டிலான பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள புதிய நீர் தேக்க தொட் டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தது அந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வெளியேறும் குடிநீர் மக்கள் பிடிக்கும் வகையில் 10 குழாய்கள் அமைக்கப் பட்டுள்ளது அதனையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் மேலும் இந்நி கழ்வில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் உதவி செயற்பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி உதவி ஆணையர் சரவணன் பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார் வட்டக் கழகச் செயலாளர் ரங்கநாதன் 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ், இளநிலை பொறியாளர் ஜோசப் உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.