கோவை, தமிழ்நாடு கேரளா மாநிலங்களுக்கு இடையான எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்தி கேயன், கேரள போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்.சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வதி ஜுஜி* ,பாலக்காடு கலால் துறை ஆணையர் ராகேஷ் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் .நமச்சிவாயம்,பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் வால்பாறை துணை காவல் கண்காணிப் பாளர் ஸ்ரீநிதி மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், அகழி துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் கேரளா – தமிழ்நாடு எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களின் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் பற்றிய முன்கூட்டியே உளவுத்துறைகள் தகவல்கள் சேகரித்தல் மற்றும் பரிமாறிக் கொள்வது பற்றியும், லாட்டரி, பாலியல் தொழில், போலி மது, கஞ்சா, கனிமங்கள், மணல், மதிப்புமிக்க பொருட்கள் கடத்தல், போன்ற சட்டவிரோத செயல்களின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை சேகரித்தல் பற்றியும்,எல்லை சோதனைச் சாவடிகள் மூலம் எல்லை தாண்டிய குற்ற செயல்களை கட்டுப்படுத்துதல் பற்றியும், இரு மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களை கட்டுப்படுத்த இரு மாநிலங்களின் தனிப்படைகளை ஒருங்கிணைப்பது பற்றியும்,எல்லைப் பகுதியில் நடைபெறும் குற்றங்களில் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும், எல்லை தாண்டி உள்ள கைதிகளை கைது செய்தல் பற்றியும், முக்கிய பிரமுகர்களின் வழிப்பாதுகாப்பு பற்றியும், இரு மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத போக்குவரத்து,மருத்துவக் கழிவுகள் மற்றும் கால்நடைக் கழிவுகளை கொட்டுவதைத் தடுத்தல் பற்றியும்,
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பற்றியும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட இரு மாநில காவல் அதிகாரிகளும் மாநிலங்களின் எல்லை தாண்டி செயல்பட உள்ள இடையூறுகளை இரு மாநில காவல் கண்காணிப்பாளர்களிடம் எடுத்துக் கூறினார்கள். இந்நிலையில் இரு மாநில காவல் கண்காணிப்பாளர்களும் பணியில் உள்ள இடையூறுகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0