ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் மீனவர்களின் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மீனவர்களின் கோரிக்கை மனுவை பெற்று உடனடியாக மீனவர்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தவுடன், மத்திய மாநில அரசுகள் இணைந்து மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என மீனவர்கள் மத்தியில் தெரிவித்தார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே ராமேஸ்வரம் அடுத்த செம்மமடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மனோலயா மனநல காப்பகம் மற்றும் மறுவாழ்வு மையத்தை திறந்து வைப்பதற்காக சாலை மார்க்கமாக தங்கச்சிமடத்தில் நடைபெற்று வந்த மீனவர்கள் காத்திருக்கும் போராட்டம் பந்தலை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வந்தார்.
அரசு துறை அதிகாரிகள் தங்கச்சி மடத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம் குறித்து ஆளுநரிடம் தெரிவித்தனர் இதனை அடுத்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மீனவர் பிரச்சினை குறித்து கேட்பதற்காக காரை விட்டு இறங்கிய தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மீனவர்களின் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு சென்றார். போராட்ட பத்தலுக்கு வந்த ஆளுநரை பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் ஆளுநரிடம் கோரிக்கையை மனுவை அளித்தனர். அந்த மனுவில் இலங்கை சிறையில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள மீனவர் களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்து தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கோரிக்கைகளை மீனவர்கள் வாய் மொழியாக ஆளுநரிடம் முன்வைத்தனர். கோரிக்கைகளை பொறுமையாக கேட்டுக்கொண்ட தமிழக ஆளுநர் மீனவர்களிடம் மைக்கில் பேசினார்.அப்போது அவர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கான மத்திய மாநில இணைந்து தீர்வு காண வேண்டிய ஒன்று இருப்பினும் மீனவர் பிரச்சனை குறித்து உடனடியாக நான் அரசின் கவனத்திற்கு கொண்டு போவதாக உறுதியளித்தார். பின்னர் காத்திருப்பு பந்தலில் அமர்ந்திருந்த மீனவர்களின் குடும்பத் தினரை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.