தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் ரவி இன்று காலை டெல்லி செல்லவுள்ளார். ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார். நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் ஆளுநருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே உள்ள உரசல் போக்கு அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0