தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டு குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாடி அதற்கு அடிமையாகி பலர் தங்கள் பெருமளவு பணத்தை இழந்து, கடனாளியாக மாறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்காக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் அந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வெளியாகிவிட்டது. இதனை தொடர்ந்து தற்போதைய திமுக ஆட்சி காலத்தில் பணத்தை வைத்து விளையாடி வரும் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்கப்படுத்தும் சட்டம்.
குறிப்பாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டத்திற்கு கடந்த மாதம் 26ஆம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அவசர சட்டத்திற்கு தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவசர சட்டம் என்பதால் நாளை முதல் இந்த அவசர சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும். இம்மாதம் வரும் 17ஆம் தேதி, சட்டமன்றம் கூடுகையில் இந்த ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் சட்டம் உறுப்பினர்கள் கவனத்திற்கு வைக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு முறையாக அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டு குறிப்பாக ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்ளார். இது அவசர சட்டம் என்பதால், நாளை முதல் இந்த சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முறையாக எம்.எல்.ஏக்கள் ஒப்புதல் பெறப்பட்டு தடை உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை இதே போல தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி அது உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால், இந்த முறை அவ்வாறு நடைபெறாமல் இருக்க, அதற்கான நெறிமுறைகளை நன்கு ஆராய்ந்து அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.