சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பெருநகர சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகளின் இயக்ககம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ. 769.97 கோடி செலவிலான 103 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார் அதன் ஒரு பகுதியாக சூலூர் பேரூராட்சியின் சார்பில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 24 அடுக்குமாடி குடியிருப்பு மூன்று கோடி செலவில் கட்டப்பட்ட குடியிருப்பு வளாகத்தையும் திறந்து வைத்தார் சூலூர் பேரூராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றிய வர்களுக்கு பழைய வீடு சிதிலமடைந்த நிலையில் அவற்றை அகற்றிவிட்டு புதிதாக அடுக்குமாடி குடியிருப்பாக 24 வீடுகள் வரவேற்ப்பறை சமையலறை, கழிவறை உடன் கூடிய இரண்டு படுக்கையறை என கட்டப்பட்ட 24 வீடுகளும் தமிழக முதலமைச்சரால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. காணொளி காட்சியில் வழியாக திறக்கப்பட்ட வீடுகளுக்கு வண்ண விளக்குகள் அமைத்து வாழைமரம் பூ மாலைகளால் சூலூர் பேரூராட்சியின் சார்பில் அலங்கரிக்கப்பட்டு கோயமுத்தூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், உதவி செயற்பொறியாளர் லலிதாமணி, சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன்,சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி கந்தசாமி, சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மன்னவன், பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், துணை தலைவர் கணேஷ், பேரூராட்சி தலைமை எழுத்தர் கோவிந்தராஜ், திமுக நகர செயலாளர் கௌதமன் அதிமுக நகர செயலாளர் கார்த்திகை வேலன், பேரூராட்சி முன்னாள் பொறுப்புத் தலைவர் செல்வராஜ் வார்டு உறுப்பினர்கள் கருணாநிதி, வீராசாமி, பால்ராஜ், வேலுச்சாமி, மேகநாதன்,சுமதி கார்த்திகைவேலன், கார்த்திகா ,லலிதா, சன்மதி , வெண்ணிலா, கவிதா, விஜயலட்சுமி, தங்கமணி மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0