இந்திய தொலைத்தொடர்பு, ஒழுங்குமுறை ஆணையத்துடன் இணைந்து நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு மையம் மற்றும் ஸ்ரீ வாசவி கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஒத்துழைப்புடன் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் தொலைத்தொடர்பு மற்றும் இணையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர்.எம்.தாமரைகண்ணன் அவர்கள் தலைமையில் கல்லூரி செயலர் Rtd.N.சதாசிவம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வருகைபுரிந்தோரை கல்லூரியின் உதவிபேராசிரியர் முனைவர்.ஆர்.காயத்ரி பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்றார். விழிப்புணர்வு நிகழ்வின் துவக்க உரையை தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச்செயலாளரும் இந்திய தொலைத்தொடர்பு ஆனையத்தின் உறுப்பினருமான டாக்டர்.ஆர்.ரமேஷ் அவர்கள் வழங்கினார். அவர்கள் பேசுகையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 இன் பிரிவு 3 இன் கீழ் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகும் . இது இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டாளராகும் . TRAI யிடமிருந்து தீர்ப்பு மற்றும் தகராறுகள் செயல்பாடுகளை மேற்கொள்ள தொலைத்தொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நிறுவியது. தற்போது இந்தியாவில் பிராட்பேண்ட் ஊடுருவலை அதிகரிக்க, TRAI WANI ( வைஃபை அணுகல் நெட்வொர்க் இடைமுகம்) கட்டமைப்பை முன்மொழிந்துள்ளது. செயல்படுத்தப்பட்டால், தேவைக்கேற்ப Wi-Fi இணையம் கிடைக்கும் பொதுத் தரவு அலுவலகங்கள் (PDOs) அமைக்க வழிவகுக்கும். குரல் அழைப்புகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட பிசிஓக்களுடன் TRAI இதையே தொடர்புபடுத்துகிறது மற்றும் மொபைல் ஃபோன்கள் அல்லது வீட்டு லேண்ட்லைன்கள் இறுதியான தகவல்தொடர்பு பயன்முறையாக மாறுவதற்கு முன்பு மிகவும் பிரபலமான ஹாட்ஸ்பாட்களாக இருக்கும் என கூறினார். நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு மைய தலைவர் டாக்டர். பி.வெங்கடாசலம் அவர்கள் பேசுகையில், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், இந்திய தொலைத்தொடர்புத் துறையின் தரவு அடிப்படையிலான கண்ணோட்டத்தை சீரான இடைவெளியில் வழங்கவும், TRAI வெளியீடு அறிக்கைகள் பிரிவின் கீழ் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது என கூறினார். அதன்பிறகு ஈரோடு மாவட்ட பி.எஸ்.என்.எல்-ன் SBE திட்ட அலுவலர் எஸ்.செந்தில்குமார் பேசுகையில் தொலைத்தொடர்புத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு உதவும் சூழலை உருவாக்கி வளர்ப்பதே TRAI இன் நோக்கமாகும் . TRAI இன் முக்கிய நோக்கங்களில் ஒன்று வெளிப்படையான கொள்கை சூழலை வழங்குவதாகும். TRAI ஆனது கட்டணங்கள், இடைத்தொடர்புகள், நேரடியாக வீட்டிற்கு (DTH) சேவைகள் மற்றும் மொபைல் எண் பெயர்வுத்திறன் போன்ற பல்வேறு பாடங்களில் ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்கியுள்ளது எனவும், தற்போது BSNL லில் அதிவேக இன்டர்நெட் செயல்பாடு FTTH (Fibre To The Home) மூலம்வெகுவாக வளர்ந்து வருகிறது அதனை அனைவரும் பயன்படுத்திகொள்ளுமாறு கூறினார். இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட பி.எஸ்.என்.எல் JTO enterprises ஸ்ரீகந்தன் , கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்பட சுமார் 250 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி உதவிபேராசிரியர் முனைவர் B.ஜீவா ரேகா நன்றி கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0