கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழக சிறுவன்.!!

மிழகத்தை சேர்ந்த சிறுவன் பிரனேஷ் இந்தியாவின் 79ஆவது கிராண்ட் மாஸ்டராகியுள்ளார். அதுபோல் தற்போது தமிழகத்தின் 28ஆவது கிராண்ட் மாஸ்டர் இவர்.

காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுவன் பிரனேஷ் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ் போட்டியில் தங்கம், 16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்.

பிரனேஷ் காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் படித்து வருகிறார். தந்தை முனிரத்தினம் ஜவுளிக்கடை ஒன்றில் கணக்கராகவும், அம்மா மஞ்சுளா அங்கன்வாடி பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

பிரணவ் 5 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார். 7 வயதுக்குட்பட்ட தேசிய போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 11 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ளார். 12 வயதுக்குட்பட்ட காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.