கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7- வதுபடை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்து 2 – ந் தேதி தொடங்கியது . இதை யொட்டி தினமும் காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தினமும் சத்ருச சம்ஹாரம்வேள்வி, விநாயகர் பூஜை, சண்முகார்ச்சனை நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனால் நேற்று அதிகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு 16 வகையான வாசனை திரவியங் களால் அபிஷேகம் ,மதியம் 3மணி அளவில மூலவரிடம் இருந்து சுவாமி வேல் வாங்கி பச்சைநாயகி அம்மனிடம் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்ன சுவாமி அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி வேலை வாங்கிக் கொண்டு முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் கோவிலின் முன் எழுந்தருளினார். வீரபாகு தேவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். இதைத்தொடர்ந்து முருகப் பெருமான் முதலில் தாரகா சூரனை வதம் செய்தார்.இரண்டாவதாக பானு கோபனை வதம் செய்தார். மூன்றாவதாக சிங்கமுகா சூரணையும், நான்காவதாக சூரபத்மனையும் தனது வேலால் தலையை துண்டித்து முருகப்பெருமான் வதம் செய்தார். அப்போது அங்கு திரளாக குடியிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா , கந்தனுக்கு அரோகரா ,என்று பக்தி பரவசத் துடன் முழக்கமிட்டனர். இதை யடுத்து சூரனை வதம் செய்த சுவாமியின் கோபத்தை தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கந்தசஷ்டி விழாவை யொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்தை தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை நிறைவு செய்தனர். இன்று ( வெள்ளிக்கிழமை) காலை 8:30 மணிக்கு யாகசாலையில் உள்ள கலசங்களில் தீர்த்தங்களை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, கலசங்கள் பூஜையும் காலை 10 மணிக்கு சுப்ரமணிய சுவாமி – வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது .அதன் பிறகு சுவாமிக்கு பக்தர்கள் மொய் பணம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து பாதகாணிக்கை செலுத்துதல், பூஜை தீபாரதனை நடந்தது சுவாமி வள்ளி தெய்வானையுடன் வாகனத்தில் வீதி உலா வந்தார். இதற்கான ஏற்பாடுகளை மருதமலை கோவில்அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், துணை ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர்கள் மகேஷ் குமார் பிரேம்குமார் கனகராஜன் ,சுகன்யா ராஜரத்தினம் ஆகியோர் செய்திருந்தனர்.இதேபோல சுக்கிரவார் பேட்டை பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலும் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. நண்பகல் 12 மணிக்கு வேலாயுதம் புறப்பாடு, தீபாராதனை முருகப்பெருமான் ராஜ ராஜேஸ்வரி கோவிலுக்கு எழுந்து அருளுதல் நடந்தது. மாலை 5:30 மணிக்கு பால தண்டாயுத பாணி சுவாமி ராஜராஜேஸ்வரி அம்மனிடம் வேலை வாங்கிக் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.. அப்போதுஅங்கு திரண்டு இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா போன்ற பக்தி கோ ஷங்களை முழங்கினர். கந்த சஷ்டி விழாவையொட்டி ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர்..இன்று மாலை 6 மணிக்கு திருக் கல்யாணம்நிகழ்ச்சி நடக்கிறது.வருகிற 11ஆம் தேதி இரவு 8 மணிக்கு லட்சார்சனையுடன் விழா நிறைவடைகிறது. விழாவை யொட்டி பக்தர்களின் வருகைக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப் பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன், அறங்காவலர்கள் மகேஸ்வரன், ராஜா விஜயலட்சுமி. செயல் அலுவலர் பாலசுப்ரமணியம்மற்றும் கோவில் நிர்வாகிகள், ஊழியர் கள் குருக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.இதே போல குருந்தமலை குழந்தை வேலாயுத சாமி திருக்கோவில் அன்னூர் அருகே உள்ள குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய கோவில் கருமத்தம்பட்டி பக்கமுள்ள சென்னி ஆண்டவர் கோவில் உட்பட பல முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0