கோவை மாவட்டத்தில் 2 புதிய புறக்காவல் சாவடி..போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நால்ரோடு பகுதி யிலும், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணிபுதூர் பகுதியிலும் புதிதாக புறக் காவல் சாவடி தொடங்கப்பட்டுள்ளது. இதை போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் திறந்து வைத்தார். குற்றங்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும் இந்த புறக்காவல் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர். கார்த்திகேயன் தெரிவித்தார். விழாவில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர். சண்முகவேல், கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்…