ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகிலுள்ள ஒத்த குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு துறையின் சார்பாக கோடைகால தையல் பயிற்சி இனிதே நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமப்புற பகுதியில் இருந்து மற்றும் சுய உதவிக் குழு மகளிர் மற்றும் இல்லத்தரசிகள் என மொத்தம் 15 பேர் பங்கேற்றனர் மே 6 முதல் மே 22 ஆம் தேதி வரை இப்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் இல்லத்தரசிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றனர் இப்ப பயிற்சியின் நிறைவு விழா இன்று மே 22 அன்று கல்லூரியின் செயலாளர் அனுமதி பெற்று கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ. மோகனசுந்தரம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. கோடைகால தையல் பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் ஆடை வடிவமைப்பு துறையின் தலைவி டீ .ஷாலினி அவர்கள் வரவேற்றார். இதனை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ. மோகனசுந்தரம் தையில் பயிற்சியை கலந்து கொண்டவர்களிடம் இருந்து கருத்துக்களை வாங்கி கொண்டு அதற்கான தீர்வுகளையும் தையல் கலையின் எதிர்கால வளர்ச்சியை குறித்தும் விளக்கிக் கூறினார். இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் சி. நஞ்சப்பா அவர்கள் தையல் கலையின் கூட்டுத்தொழில் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார் இப்பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் தங்களது பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் மேலும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது இறுதியில் நன்றியுரை உதவி பேராசிரியர் பி. அனிதா அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆடை வடிவமைப்புத்துறை தலைவி த. ஷாலினி மற்றும் உதவி பேராசிரியர்கள் கே. தேன்மொழி ,பி. அனிதா, ரா .ஜ .சாதனா மற்றும் மாணவ மாணவியர் செய்திருந்தனர். 15 நாள் தையல் பயிற்சி இனிதே நிறைவடைந்தது
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0