கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் 53 வயது மதிக்கத்தக்க அருள்குமார் என்பவர்
வண்டியிலிருந்து தவறி விழுந்தது சூலூர்அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையின் தலைமை பொறுப்பு மருத்துவர் கஜேந்திரன் அவரை பரிசோதித்து எக்ஸ்ரே எடுத்ததில், இடது இடுப்பு எலும்பு முறிந்ததாக கூறினார். அவருக்கு இடுப்பு எலும்பில் பிளேட் மற்றும் ஸ்குரு வைக்கவேண்டுமென்று கூறினார் . அதற்காக சி -ரேம் எனும் கருவி
தேவைப்படுவதால் அந்த வசதி இம்மருத்துவமனையில் இல்லை என்பதை கூறினார். இருப்பினும் அறுவைச் சிகிச்சை செய்ய முயற்சி எடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் எக்ஸ்ரே எடுத்துக் பார்த்ததில் பிளேட் மற்றும் எலும்பு முறிவு சரியாகப் பொருந்தி இருப்பதை நோயாளிடம் தெரிவித்தும் இனி பயமில்லை ஒரு வாரத்தில் நடந்து விடலாம் என்று கூறி நோயாளிக்கு தைரியம் ஊட்டப்பட்டது மேற்கண்ட மருத்துவ சிகிச்சை முதன்மை இயந்திரம் இல்லாமல் சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினரை நோயாளிகளின் உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து பாராட்டினர்.
இதுபோல சூலூர் அரசு மருத்துவமையில் பலவிதமான அறுவை சிகிச்சைகளும்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டின் மூலம் செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினரை, பணியாளர்களை கோய முத்தூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர், மருத்துவர் சுமதி வெகுவாகப் பாராட்டினார். விரைவில் மருத்துவமனைக்கு சி ரேம் கருவி தமிழ்நாடு அரசு மூலம் பெறப்பட்டு தொடர்ந்து இது போன்ற விபத்தில் ஏற்படும் எலும்பு சம்பந்தமான அறுவை சிகிச்சைகள் சிறப்பாக செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கஜேந்திரன் குடியரசு தின விழாவில் சிறந்த மருத்துவர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0