கோவை ரெயிலில் இன்று திடீர் சோதனை. 16கிலோ கஞ்சா சிக்கியது.

கோவை; பாட்னா வில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 11 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அந்த ரயிலில் ஒரு பெட்டியை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி ,சப் இன்ஸ்பெக்டர் சாந்தி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, முதல் நிலை போலீஸ் காரர் சுரேஷ்குமார் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினார்கள். அப்போது பொது பெட்டியில் இருக்கைக்கு அடியில் ஒரு பார்சல்அனாதையாக கிடந்தது.சந்தேகத்தின் பேரில் போலீசார் அதை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில் 16 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது..இந்த கஞ்சாவைவடமாநிலத்தில் இருந்து ரயிலில் யாரோ ஒரு மர்ம ஆசாமி கடத்தி வந்துள்ளார். இதை யார்கடத்தி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..