கோவை துடியலூர் பன்னிமடை ரோட்டில் தனியார் மருத்துவமனை உள்ளது.இதை டாக்டர் மூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனை முகப்பு தோற்றத்தில் மருந்து கடையும் உள்ளது..நேற்று இரவு கடை பூட்டப்பட்டது. இன்று அதிகாலை மருத்துவமனை கட்டிடத்திலிருந்து புகை வந்தது.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக் கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதில் பிரிட்ஜ் ,ஏசி ,போன்ற பொருள்கள் எரிந்து சேதமடைந்தது. .மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது .இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0