இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 10 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நான்கு பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவாலுண்டோ மாவட்டத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சுரங்கத்தில் மீத்தேன் உள்ளிட்ட வாயுக்கள் வெளியேறியதால் வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து இந்த வெடிவிபத்து குறித்த தகவல் அறியும் விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டுனர்.
மேலும் 240-மீட்டர் (800-அடி) நீளமான சுரங்கப்பாதையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தீக்காயங்களுக்கு ஆளாகினர் என்றும், சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆக்டேவியன்டோ தெரிவித்துள்ளார்.