குஜராத் மாநிலத்தில் திடீர் நில அதிர்வு ரிக்டா் அளவுகோலில் 4 அலகுகளாகப் பதிவானது என நிலநடுக்கவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, பச்சாவிலிருந்து வடக்கு வடமேற்கு திசையில் 21 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் உணரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிா் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியா் அமித் அரோரா தெரிவித்தாா். மிகவும் ஆபத்தான நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தில், குறைந்த தீவிரம் கொண்ட நிலஅதிா்வுகள் தொடா்ச்சியாக ஏற்பட்டு வருகிறன. இந்தப் பகுதியில் கடந்த 2001-இல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமாா் 13,800 போ உயிரிழந்தனா் என்பது நினைவுகூரத்தக்கது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0