திருச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் உள்ள வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற சங்கத்தினர் போராட்டம். மறு நியமன போட்டி தேர்வை முற்றிலும் நீக்கிட வேண்டும், திமுக தேர்தல் அறிக்கை 177 ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ,பாதிக்கப்பட்ட 4000 ஆசிரியர் களை குறைந்தபட்ச தொகுப்பூதியத்திலாவது பணியமர்த்திட வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பதினோரு ஆண்டு கால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன கோரிக்கை களை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் நல சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் வடிவேல் சுந்தர் முன்னிலை வகித்தார். தர்ணா போராட்டத்தில் மாநில பொருளாளர் ஹரிஹரசுதன், மாநில அமைப்பாளர் ஸ்ரீதர், மாநில பொறுப்பாளர் ஏகாம்பரம்,மாநில ஆலோசகர் அன்பரசு, மாநில செயலாளர் முருகன், மாநில துணை அமைப்பாளர் தினேஷ் பாபு, மத்திய மண்டல பொறுப் பாளர் பிரபாகரன், மாநில நிர்வா கிகள் ரோகினி வடிவேல், அன்புமணி,ஹெலினா மாலதி, பேச்சிமுத்து, நாகூர் மீரா, தேவராஜன், எழிலரசன் உள்பட நூற்றுக்கணக்கான கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் சண்முகப்பிரியா நன்றி கூறினார். திருச்சியில் தகுதி தேர்வு ஆசிரியர்களின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகம் அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0