5 மாநில தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க பெரும்பான்மையான இடத்தை பிடித்து வெற்றி பெற்ற வேளையில் கடந்த 10 நாட்களாக சரிவில் இருந்த பங்குச்சந்தை என்று மீண்டும் எழுந்துள்ளது.
இன்று 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்ராகண்ட் என ஐந்து மாநிலங்களில் 690 இடங்களைக் கொண்ட தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது மொத்தமுள்ள ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலத்தில் பா.ஜ.க கைப்பற்றி ஆட்சியை பிடிக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து ஆம் ஆத்மி அங்கு ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இந்நிலையில் இந்த வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் கடந்த 10 நாட்களாக உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தால் சரிவை சந்தித்த பங்குச்சந்தையின் புள்ளிகள் இன்று மீண்டும் எழுச்சி பெறத் துவங்கியுள்ளன.
காலையில் சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2.28% அறிவித்து 55,894 புள்ளிகளை தொட்டது காலையில் சரிவுடன் துவங்கிய நிப்டி 2.24% உயர்வுடன் 16,711 புள்ளிகளை தொட்டுள்ளது. பாஜகவின் வெற்றி செய்திகள் எதிரொலியாக பங்குச் சந்தை எழுச்சி கண்டது பல முதலீட்டாளர்களை மலரச் செய்துள்ளது மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.