தமிழகத்தில் குடிசையில்லா நகரங்களை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பு நடத்தும், ஃபேர்புரோ’ என்ற தலைப்பில் வீடு, மனை விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் குடிசையில்லா நகரங்களை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி, சுற்றுச்சூழல், பெண்கள் முன்னேற்றம் என அனைத்து துறை வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறோம். குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்க நாட்டிலேயே முதல் முயற்சி எடுத்தது தமிழகம் தான். அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக திகழ்வதாக பாராட்டுகளை பெற்றுள்ளது தமிழகம். குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டம் எல்லோக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் கொள்கைகளை தீட்டி வருகிறோம்.
அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி. தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகிறது. எல்லோருக்குமான வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.